கோப்புகளை பொது பகுதி மூலம் தேர்ந்தெடுக்கவும்

நீங்கள் கோப்பு பெயரில் உள்ள பொது அமைப்பைக் கொண்டு ஒரு கோப்புறையில் இருக்கும் கோப்புகளை தேர்ந்தெடுக்க முடியும். பொருந்தும் உருப்படிகளை தேர்ந்தெடுக்கவும் சாளரத்தை வரவழைக்க Ctrl+S ஐ அழுத்தவும். கோப்பு பெயர்களில் பொதுவாகப் பொருந்தும் பொது பகுதியை தட்டச்சு செய்து அத்துடன் வைல்டு கார்டு எழுத்துகளைத் தட்டச்சு செய்யவும். இரண்டு வைல்டு கார்டு எழுத்துகளைப் பயன்படுத்தலாம்:

  • * என்பது எந்த எழுத்துகளும் எத்தனை இருந்தாலும் பொருந்தும், எழுத்துகளே இல்லாவிட்டாலும் பொருந்தும்.

  • ? என்பது ஏதேனும் ஒரு எழுத்துக்கு மட்டும் பொருந்தும்.

உதாரணமாக:

  • உங்களிடம் Invoice என்ற ஒரே அடிப்படைப் பெயரைக் கொண்ட OpenDocument Text கோப்பு, ஒரு PDF கோப்பு மற்றும் ஒரு படக் கோப்பு ஆகியவை இருந்தால் இந்த பொதுப் பகுதியைக் கொண்டு மூன்று கோப்புகளையும் சேர்த்து தேர்ந்தெடுக்கலாம்

    Invoice.*

  • உங்களிடம் Vacation-001.jpg, Vacation-002.jpg, Vacation-003.jpg என்றவாறு பெயரிட்ட புகைப்படங்கள் இருந்தால்; இவை அனைத்தையும் தேர்ந்தெடுக்க இந்த பொதுப் பகுதியைப் பயன்படுத்தலாம்

    Vacation-???.jpg

  • If you have photos as before, but you have edited some of them and added -edited to the end of the file name of the photos you have edited, select the edited photos with

    Vacation-???-edited.jpg