மறுபிரதியில் இருந்து மீட்டெடு

உங்கள் கோப்புகளில் ஏதேனும் சிலவற்றை இழந்துவிட்டால் அல்லது நீங்கள் அழித்துவிட்டால், ஆனால் அவற்றின் மறுபிரதியை நீங்கள் வைத்திருக்கிறீர்கள் எனில், மறுபிரதியிலிருந்து அவற்றை நீங்கள் மீட்டெடுக்க முடியும்:

  • தனியான வன்வட்டு, USB இயக்கி அல்லது பிணையத்தில் உள்ள வேறொரு கணினி போன்ற சாதனங்களில் உள்ள மறுபிரதியிலிருந்து உங்கள் மறுபிரதியை மீட்டெடுக்க வேண்டுமானால் அவற்றை நீங்கள் மீண்டும் உங்கள் கணினிக்கு நகலெடுப்பதன் மூலம் மீட்டெடுக்கலாம்.

  • நீங்கள் Déjà Dup போன்ற மறுபிரதி பயன்பாட்டைக் கொண்டு மறுபிரதியெடுத்திருந்தால், உங்கள் கோப்புகளை மீட்டெடுக்க அதே பயன்பாட்டைப் பயன்படுத்துவதே சிறந்தது. உங்கள் மறுபிரதி பயன்பாட்டின் உதவியைப் பார்க்கவும்: அதில் உங்கள் கோப்புகளை எப்படி மீட்டமைப்பது என்பது தொடர்பான அறிவுறுத்தல்கள் இருக்கும்.