கோப்பு அனுமதிகளை அமைத்தல்

நீங்கள் உங்களுக்கு சொந்தமான கோப்புகளை யாரெல்லாம் பார்க்க, திருத்த முடியும் என்பதைக் கட்டுப்படுத்த கோப்பு அனுமதிகளைப் பயன்படுத்தலாம். ஒரு கோப்பு அனுமதிகளைக் காண மற்றும் அமைக்க, அதை வலது சொடுக்கம் செய்து, பண்புகள் ஐ தேர்ந்தெடுத்து பிறகு அனுமதிகள் தாவலைத் தேர்ந்தெடுக்கவும்.

நீங்கள் அமைக்கக்கூடியா அனுமதிகளின் வகைகளைப் பற்றிய விவரமறிய கோப்புகள் மற்றும் கோப்புறைகள் ஐப் பார்க்கவும்.

கோப்புகள்

நீங்கள் கோப்பு உரிமையாளர், குழு உரிமையாளர் மற்றும் கணினியின் பிற அனைத்து பயனர்கள் ஆகியோருக்கான அனுமதிகளை அமைக்க முடியும். உங்கள் கோப்புகளுக்கு நீங்களே உரிமையாளர், இதில் நீங்கள் உங்களுக்கே படிக்க மட்டுமே அனுமதி அல்லது படிக்க மற்றும் எழுத அனுமதி கொடுத்துக்கொள்ள முடியும். நீங்கள் தற்செயலாக கோப்புகளில் மாற்றம் செய்யாமல் தடுக்க வேண்டும் என்றால் அவற்றுக்கு வாசிக்க மட்டும் அனுமதியை அமைக்கவும்.

Every user on your computer belongs to a group. On home computers, each user typically has their own group, and group permissions are not often used. In corporate environments, groups are sometimes used for departments or projects. Each file has an owner and belongs to a group. You can set the file's group and control the permissions for all users in that group, but you can only set the file's group to a group you belong to.

நீங்கள் கோப்பின் குழுவில் உள்ள உரிமையாளரல்லாத மற்ற பயனர்களுக்கும் அனுமதிகளை அமைக்க முடியும்.

If the file is a program, such as a script, you must select Allow executing file as program to run it. Even with this option selected, the file manager may still open the file in an application or ask you what to do.

கோப்புறைகள்

நீங்கள் கோப்புறையில் உரிமையாளர், குழு மற்றும் பிற பயனர்களுக்கு அனுமதிகளை அமைக்க முடியும். உரிமையாளர்கள், குழுக்கள் மற்றும் பிற பயனர்களின் விளக்கத்திற்கு மேலே உள்ள கோப்பு அனுமதிகள் பற்றிய விவரங்களைப் பார்க்கவும்.

நீங்கள் ஒரு கோப்புறைக்கு அமைக்கக்கூடிய அனுமதிகள் ஒரு கோப்புக்கு அமைக்கக்கூடிய அனுமதிகளில் இருந்து வேறுபட்டது.

எதுவுமில்லை

கோப்புறையில் என்ன கோப்புகள் உள்ளது என்பதைக் கூட பயனரால் பார்க்க முடியாது.

கோப்புகளின் பட்டியல் மட்டும்

பயனர் கோப்புறையில் என்ன கோப்புகள் உள்ளன எனப் பார்க்க முடியும், ஆனால் கோப்புகளை திறக்க, உருவாக்க அல்லது அழிக்க முடியாது.

கோப்புகளை அணுக

பயனர் கோப்புறையில் உள்ள கோப்புகளைத் திறக்க முடியும் (குறிப்பிட்ட கோப்பில் அவர்கள் அவ்வாறு செய்ய அனுமதி வழங்கப்பட்டிருந்தால்) ஆனால் புதிய கோப்புகளை உருவாக்க அல்லது கோப்புகளை அழிக்க முடியாது.

கோப்புகளை உருவாக்க மற்றும் அழிக்க

பயனருக்கு கோப்புகளை திறத்தல், உருவாக்குதல் மற்றும் அழித்தல் உட்பட கோப்புறைக்கான முழு அணுகல் இருக்கும்.

You can also quickly set the file permissions for all the files in the folder by clicking Change Permissions for Enclosed Files. Use the drop-down lists to adjust the permissions of contained files or folders, and click Change. Permissions are applied to files and to all folders in subfolders as well.