கோப்பு பண்புகள்

ஒரு கோப்பு அல்லது கோப்புறை பற்றி தகவலைக் காண, அதை வலது சொடுக்கம் செய்து பண்புகள் ஐ தேர்ந்தெடுக்கவும். நீங்கள் கோப்பைத் தேர்ந்தெடுத்துவிட்டு Alt+Enter ஐ அழுத்தியும் பண்புகளைக் காணலாம்.

The file properties window shows you information like the type of file, the size of the file, and when you last modified it. If you need this information often, you can have it displayed in list view columns or icon captions.

அடிப்படை தாவலில் கொடுக்கப்படும் தகவல் கீழே விளக்கப்பட்டுள்ளது. அனுமதிகள் மற்றும் இதைக் கொண்டு திற தாவல்களும் உள்ளன. படங்கள் மற்றும் வீடியோக்கள் போன்ற சில வகையான கோப்புகளுக்கு, பரிமாணங்கள், காலம் மற்றும் கோடெக் போன்ற தகவல்களை வழங்கும் கூடுதல் தாவலும் இருக்கும்.

அடிப்படை பண்புகள்

பெயர்

நீங்கள் இந்த புலத்தை மாற்றுவதன் மூலம் கோப்பை மறுபெயரிட முடியும். நீங்கள் பண்புகள் சாளரத்திற்கு வெளியேயும் ஒரு கோப்பை மறுபெயரிட முடியும். ஒரு கோப்பு அல்லது கோப்புறையை மறுபெயரிடுதல் ஐப் பார்க்கவும்.

வகை

PDF ஆவணம், OpenDocument உரை அல்லது JPEG படம் போன்று, கோப்பு வகையை அடையாளம் காண இது உதவுகிறது. மற்ற அம்சங்களுடன், ஒரு கோப்பை எந்தப் பயன்பாடுகள் திறக்க முடியும் என்பதையும் கோப்பு வகையே தீர்மானிக்கிறது. உதாரணமாக, நீங்கள் ஒரு மியூசிக் பிளேயர் மூலம் ஒரு படத்தை திறக்க முடியாது. இது குறித்த மேலும் தகவலுக்கு மற்ற பயன்பாடுகளைக் கொண்டு கோப்புகளைத் திறக்கவும் ஐப் பார்க்கவும்.

கோப்பின் MIME வகை அடைப்புக்குறிக்குள் காட்டப்படும்; MIME வகை என்பது கணினிகள் கோப்பு வகையைக் குறிக்க பயன்படுத்தும் ஒரு தரநிலையான வழியாகும்.

உள்ளடக்கம்

நீங்கள் ஒரு கோப்பை அன்றி ஒரு கோப்புறையின் பண்புகளில் பார்த்தால் இந்த புலம் காட்டப்படும். இது கோப்புறையில் உள்ள உருப்படிகளின் எண்ணிக்கையைக் காண உதவுகிறது. கோப்புறையில் மற்ற கோப்புறைகள் இருந்தால், உள்ளே உள்ள ஒவ்வொரு கோப்புறையும் ஒரு உருப்படியாகக் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறது. அவையும் உருப்படிகளைக் கொண்டிருந்தால், அவையும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகின்றன. கோப்புறை காலியாக இருந்தால், உள்ளடக்கம் எதுவும் இல்லை எனக் காண்பிக்கும்.

அளவு

நீங்கள் ஒரு கோப்பைப் (கோப்புறையல்ல) பார்த்தால் இந்த புலம் காட்டப்படும். ஒரு கோப்பின் அளவு என்பது அது எவ்வளவு வட்டு இடத்தை எடுத்துக்கொள்கிறது எனக் கூறுகிறது. இது ஒரு கோப்பை பதிவிறக்க அல்லது மின்னஞ்சலில் அனுப்ப எவ்வளவு நேரம் ஆகும் என்பதையும் காட்டுவதாக உள்ளது, (பெரிய கோப்புகளை பெற/அனுப்ப அதிக நேரம் ஆகும்).

அளவானது KB, MB அல்லது GB இல் காட்டப்படும்; கடைசி மூன்று வடிவங்களில் காண்பிக்கப்பட்டால், அடைப்புக்குறிக்குள் அளவு பைட்டுகளாகவும் காண்பிக்கப்படும். 1 KB என்பது 1024 பைட், 1 MB என்பது 1024 KB ஆகும். இதே போல் கணக்கீடு தொடர்கிறது.

இருப்பிடம்

உங்கள் கணினியில் உள்ள ஒவ்வொரு கோப்பின் இருப்பிடமும் அதன் முழுமையான பாதையால் வழங்கப்படுகிறது. இது உங்கள் கணினியில் உள்ள கோப்பின் தனித்துவமான "முகவரி" ஆகும், இது அந்தக் கோப்பைக் கண்டறிய நீங்கள் செல்லும் எல்லாக் கோப்புறைகளின் பட்டியலையும் உள்ளடக்கியதாக இருக்கும். எடுத்துக்காட்டாக, ஜிம்மிடம் தனது இல்லக் கோப்புறையுல் Resume.pdf என்ற கோப்பு இருந்தால், அத இருப்பிடம் /home/jim/Resume.pdf ஆகும்.

தொகுதி

The file system or device that the file is stored on. This shows you where the file is physically stored, for example if it is on the hard disk or on a CD, or a network share or file server. Hard disks can be split up into several disk partitions; the partition will be displayed under Volume too.

காலி இடம்

இந்த கோப்புறைகளுக்கு மட்டுமே காட்டப்படும். இது அந்தக் கோப்புறை உள்ள வட்டில் கிடைக்கக்கூடிய மீதமுள்ள வட்டு இடத்தின் அளவைக் குறிக்கிறது. இது வன் வட்டு நிரம்பிவிட்டதா எனப் பார்க்க பயனுள்ளதாக இருக்கும்.

அணுகப்பட்டது

கோப்பு கடைசியாக திறக்கப்பட்ட தேதி மற்றும் நேரம்.

மாற்றப்பட்டது

கோப்பு கடைசியாக மாற்றம் செய்து சேமிக்கப்பட்ட தேதி மற்றும் நேரம்.