கோப்புகள் மற்றும் கோப்புறைகளை உலவலாம்

Use the Documents file manager to browse and organize the files on your computer. You can also use it to manage files on storage devices (like external hard disks), on file servers, and on network shares.

To start the file manager, click on the Documents icon on the Desktop. You can also search for files and folders using the global search bar at the top of your desktop.

கோப்புறைகளின் உள்ளடக்கங்களை உலவுதல்

கோப்பு மேலாளரில், ஒரு கோப்புறையின் உள்ளடக்கங்களைக் காண அதனை இரு சொடுக்கவும், அதிலுள்ள ஏதேனும் ஒரு கோப்பை அதன் முன்னிருப்பு பயன்பாட்டைக் கொண்டு திறக்க கோப்பை இரு சொடுக்கவும். கோப்பை ஒரு புதிய தாவல் அல்லது புதிய சாளரத்தில் திறப்பதற்கு ஒரு கோப்புறையை வலது சொடுக்கலாம்.

ஒரு கோப்புறையில் உள்ள கோப்புகளைக் காணும் போது, நீங்கள் ஒரு கோப்பைத் திறக்கும் முன், நகலெடுக்கும் முன் அல்லது அழிக்கும் முன் சரியான கோப்பைத் தான் திறக்க உள்ளீர்களா என உறுதி செய்துகொள்ள ஸ்பேஸ் பாரை அழுத்துவதன் மூலம் விரைவில் ஒவ்வொரு கோப்பின் மாதிரிக்காட்சியைக் காணலாம்.

கோப்புகள் மற்றும் கோப்புறைகள் பட்டியலின் மேலே உள்ள பாதைப் பட்டியில் நடப்பு கோப்புறையின் தாய் கோப்புறைகள் உட்பட தற்போது நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கும் கோப்புறை எது என்று காண்பிக்கப்படும். தாய் கோப்புறைகளில் ஒன்றுக்குச் செல்ல பாதை பட்டியில் ஒரு தாய் கோப்புறையை சொடுக்கவும். ஒரு தாய் கோப்புறையை புதிய தாவல் அல்லது சாளரத்தில் திறக்க அல்லது நகலெடுக்க அல்லது நகர்த்த அல்லது அதன் பண்புகளை அணுக பாதை பட்டியில் அதனை வலது சொடுக்கவும்.

நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கும் கோப்புறையில் உள்ள ஒரு கோப்புக்கு நேரடியாக தாவ வேண்டும் என்றால், அதன் பெயரை தட்டச்சு தொடங்கவும். சாளரத்தின் மேல் ஒரு தேடல் பெட்டி தோன்றும், உங்கள் தேடல் பொருந்தும் முதல் கோப்பு தனிப்படுத்திக் காண்பிக்கப்படும். உங்கள் தேடலுக்குப் பொருந்தும் அடுத்த கோப்புக்குச் செல்ல கீழ் அம்பு விசையை அழுத்தவும் அல்லது சுட்டியைக் கொண்டு உருட்டவும்.

நீங்கள் பக்கப்பட்டியில் இருந்து பொதுவான இடங்களை விரைவில் அணுக முடியும். பக்கப்பட்டி காண்பிக்கப்படவில்லை எனில், கருவிப்பட்டியில் கீழே பொத்தானை சொடுக்கி பக்கப்பட்டியைக் காட்டு என்பதை சொடுக்கவும். நீங்கள் அடிக்கடி பயன்படுத்தும் கோப்புறைகளை புத்தகக்குறியில் சேர்க்கலாம், அவையும் பக்கப்பட்டியில் காண்பிக்கப்படும். இதை செய்ய புத்தகக்குறிகள் மெனுவைப் பயன்படுத்தவும் அல்லது ஒரு கோப்புறையை இழுத்து பக்கப்பட்டியில் இடவும்.