ஒரு கோப்பு அல்லது கோப்புறையை மறுபெயரிடுதல்

You can change the name of a file or folder in just a few easy steps.

ஒரு கோப்பு அல்லது கோப்புறையை மறுபெயரிட:

  1. உருப்படியை வலது சொடுக்கி மறுபெயரிடு என்பதைத் தேர்வு செய்யவும் அல்லது கோப்பைத் தேர்ந்தெடுத்து F2 ஐ அழுத்தவும்.

  2. புதிய பெயரைத் தட்டச்சு செய்து Enter ஐ அழுத்தவும்.

நீங்கள் ஒரு கோப்பை மறுபெயரிடும் போது, கோப்பின் பெயரின் முதல் பகுதி மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுமே தவிர கோப்பு நீட்டிப்பு ("." க்கு பிறகு உள்ள பகுதி) தேர்ந்தெடுக்கப்படாது. பொதுவாக இந்த நீட்டிப்பு பகுதி அது என்ன வகை கோப்பு என்பதைக் குறிக்கிறது (எ.கா. file.pdf ஒரு PDF ஆவணத்தைக் குறிக்கிறது), வழக்கமாக அதை மாற்ற வேண்டி இருக்காது. நீங்கள் அந்த நீட்டிப்பையும் மாற்ற வேண்டும் என்றால், முழு கோப்பு பெயரையும் தேர்வு செய்து மாற்றவும்.

நீங்கள் தவறான ஒரு கோப்பை பெயர் மாற்றிவிட்டால் அல்லது தவறாக பெயரிட்டு விட்டால், மறுபெயரிடல் செயலை செயல் தவிர்க்க முடியும். செயலை செயல் தவிர்க்க உடனடியாக கருவிப்பட்டியில் உள்ள கியர் பொத்தானை சொடுக்கி பழைய பெயரை மீட்டமைக்க செயல் தவிர் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

கோப்பு பெயர்களுக்கான செல்லுபடியான எழுத்துக்கள்

நீங்கள் கோப்பு பெயர்களுக்கு / (சாய் கோடு) தவிர எந்த எழுத்தையும் பயன்படுத்தலாம். எனினும் சில சாதனங்களில் கோப்பு பெயர்களில் இன்னும் கூடுதல் கட்டுப்பாடுகளை விதிக்கின்ற கோப்பு முறைமையைப் பயன்படுத்தலாம். எனவே, இது உங்கள் கோப்பு பெயர்களில் பின்வரும் எழுத்துக்களைத் தவிர்ப்பது சிறப்பு: |, \, ?, *, <, ", :, >, /.

If you name a file with a . as the first character, the file will be hidden when you attempt to view it in your Documents folder.

பொதுவான பிரச்சினைகள்

கோப்பு பெயர் ஏற்கனவே பயன்பாட்டில் உள்ளது

நீங்கள் ஒரே கோப்புறையில் ஒரே பெயரில் இரண்டு கோப்புகளை வைக்க முடியாது. நீங்கள் ஒரு கோப்பை மறுபெயரிடும் போது, நீங்கள் செயல்பட்டுக்கொண்டிருக்கும் அதே கோப்புறையில் முன்பே உள்ள கோப்பின் பெயரை வைக்க முயற்சித்தால் கோப்பு மேலாளர் அதை அனுமதிக்காது.

கோப்பு மற்றும் கோப்புறை பெயர்கள் பேரெழுத்து வித்தியாசம் உள்ளவை, ஆகவே File.txt மற்றும் FILE.txt ஆகிய இரண்டும் ஒன்றல்ல. இப்படி ஒரே மாதிரி உள்ள வெவ்வேறு பெயர்களைப் பயன்படுத்த அனுமதிக்கப்படும் எனினும் அது பரிந்துரைக்கப்படுவதில்லை.

கோப்பு பெயர் மிக நீளமாக உள்ளது

சில கோப்பு முறைமைகளில், கோப்பு பெயர்களில் 255 க்கும் மேற்பட்ட எழுத்துகள் இருக்க முடியாது. இந்த 255 என்ற எழுத்து வரம்பு கோப்பு பெயர் மற்றும் கோப்பு பாதை இரண்டுக்கும் சேர்த்தே ஆகும் (எ.கா., /home/wanda/Documents/work/business-proposals/… ), எனவே கூடுமான வரை கோப்பு மற்றும் கோப்புறைகளுக்கு நீண்ட பெயர்களை இடுவதைத் தவிர்க்க வேண்டும்.

மறுபெயரிடுவதற்கான விருப்பம் செயலில் இல்லை

If Rename is grayed out, you do not have permission to rename the file. You should use caution with renaming such files, as renaming some protected files may cause your system to become unstable.